சாரதா நிதி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரின் ரூ.150 கோடி சொத்துகள் முடக்கம்

By பிடிஐ

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மடாங் சிங் உட்பட சிலரின் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனை, வங்கிக் கணக்கு, நிரந்தர வைப்புக்கணக்கு உள்ளிட்ட அனைத்து வகை யான சொத்துகளையும் முடக்கு வதற்கான உத்தரவை பிறப்பித் துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மடாங்சிங், அவரின்முன்னாள் மனைவி மனோரஞ்சனா, ஊடக அதிபர் ரமேஷ் காந்தி, ஓவியர் சுவப்பிர சன்னா, முன்னாள் தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் ஆர்பாசு ஆகியோரின் சொத்துகள் முடக் கப்பட்டுள்ளன.

இதன் வழிகாட்டு மதிப்பு ரூ.28 கோடி என்றும், சந்தை மதிப்பு ரூ.150 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகள் அசாம், மேற்கு வங்கம், மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. விரைவிலேயே நீதிமன்றத்தை அணுகி இச்சொத்துகளை பொறுப்பில் எடுத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை எடுக்கும் எனத் கூறப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

விளையாட்டு

13 mins ago

ஜோதிடம்

42 mins ago

தமிழகம்

32 mins ago

விளையாட்டு

51 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்