14 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா முன்னிலை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

14 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டு உலக அளவில் அதிவேகமாக தடுப்பூசி போட்டப்பட்டுள்ளோர் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக் கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி நேற்று 100-வது நானை எட்டியுள்ளது. இதுவரை 14,09,16,417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே மிக விரைவாக தடுப்பூசி போட்டதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இதுவரை 14,09,16,417 கோடி கரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த 58.83 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளவர்களில் 92,90,528 பேர் சுகாதாரத் துறை பணியாளர்கள். 1,19,50,251 பேர் முன்களப் பணியாளர்கள். 2-வது டோஸ் போட்டுக் கொண் டுள்ளவர்களில் 59,95,634 பேர் சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள். 62,90,491 பேர் முன்களப் பணியாளர்கள்.

மூத்த குடிமக்களில் 4,96,55,753 பேர் முதல் டோஸையும், 77,19,730 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

45 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 4,76,83,792 பேர் முதல் டோஸையும், 23,30,23 பேர்2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 99 நாட்களிலேயே 14 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

13 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்