பெண் ஓவியர், வழக்கறிஞர் கொலை: மும்பையில் மூவர் கைது

By பிடிஐ

மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யாய், அவரது வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்டு போடப்பட் டுள்ளன. இதுதொடர்பாக மூன்று பேரை பிடித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஹேமா உபாத்யாய்(43) புகைப்படங்கள், சிறு சிற்பங்களை தனி பாணியில் கட்டமைப்பதன் மூலம் ஓவியங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றவர். குஜராத் லலித் கலா அகாடமி உட்பட பல விருதுகளை வென்றவர். அவரின் வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி(65).

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் வீடு திரும்பாததையடுத்து, ஹேமாவின் வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில் ஹேமா மற்றும் ஹரீஷின் சடலம் சாக்கடை அருகே அட்டைப்பெட்டிக்குள் திணிக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது.

“இருவரின் சடலங்களும் கட்டப்பட்டு இருந்தன. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இக்கொலை தொடர்பாக மூன்று பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்” என கண்டிவலி காவல் துறை துணை ஆணையர் தனஞ்செய் குல்கர்னி தெரிவித்துள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்