இந்தியாவிலிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான எண்ணிக்கையை ஆஸ்திரேலியா குறைத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கான பயணிகள் விமான எண்ணிக்கை 30% குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நடைமுறைத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் செல்ல இருப்பவர்கள் நாடு திரும்பும்போது தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவில் கடந்த இரண்டு வாரமாக கரோனா பாதிப்பு தீவிரத் தன்மையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்