18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உ.பி.யில் இலவச தடுப்பூசி: முதல்வர் ஆதித்யநாத் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தனது ட்விட்டர்பக்கத்தில் முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேசத்தை கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். இதன்மூலம் கரோனா தோல்வி அடையும் இந்தியா வெல்லும்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க, பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் கரோனா வைரஸ் பரவல் விரைவாக தடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கரோனாவைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் கரோனா வைரஸால் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்