கோகர்ணா கோயில் நிர்வாகம் மேற்பார்வை குழுவிடம் ஒப்படைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் உள்ள கோகர்ணா மஹாபலேஷ்வர் கோயில் நிர்வாகத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள கோகர்ணா மகாபலேஷ்வர் கோயிலின் நிர்வாகத்தை ராமசந்திரபுரா மடாதிபதியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவைரத்து செய்த‌ உயர் நீதிமன்றம், நிர்வாகத்தை மேற்பார்வையாளர் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராமசந்திரபுரா மடத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வீடியோ கான்பரசின்சிங் மூலம் தீர்ப்பு வழங்கியது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, "கோகர்ண மஹாபலேஷ்வர் கோயில் நிர்வாகம் முன்னாள் உச்ச‌ நீதிமன்ற நீதிபதிபி.என்.கிருஷ்ணா தலைமையிலான மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

எனவே கோகர்ணா கோயில்நிர்வாகத்தை மேற்பார்வைக் குழுவிடம் ராமசந்திரபுரா மடாதிபதி ஒப்படைக்க வேண்டும். இந்த மேற்பார்வை குழு இந்து மத மரபு, சம்பிரதாயங்களின்படி செயல்பட வேண்டும். எனவே ராமசந்திரபுரா மாடதிபதி மேற்பார்வைக் குழுவின் தலைவர் நீதிபதி பி.என்.கிருஷ்ணாவின் தலைமையின் கீழ் செயல்படும் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சினிமா

8 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்