கரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா: இதுவரை 1.35 கோடி பேருக்கு வைரஸ் தொற்று

By செய்திப்பிரிவு

உலகளாவிய கரோனா வைரஸ்பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா நேற்று மீண்டும் 2-வது இடத்துக்கு வந்தது.

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியது.

அப்போதுமுதல் உலகளாவிய கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 3.19 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.4 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 68 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை5.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் கரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தது. அப்போது 2020 செப்டம்பர் 6-ம் தேதி பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடத்துக்கு வந்தது.இதன்பின் இந்தியாவில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. பிரேசிலில் வைரஸ் தொற்று அதிகரித்து கடந்தமார்ச் 15-ம் தேதி அந்த நாடு மீண்டும் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. கடந்தசில நாட்களாக நாள்தோறும் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக உலகளாவிய கரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா நேற்று மீண்டும் 2-வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1.35 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில்1.21 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ளபிரேசிலில் இதுவரை 1.34 கோடிபேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் 50 லட்சம் பேர், ரஷ்யாவில் 46 லட்சம் பேர், பிரிட்டனில் 43 லட்சம் பேர், துருக்கியில் 38 லட்சம் பேர், இத்தாலியில் 37 லட்சம்பேர், ஸ்பெயினில் 33 லட்சம் பேர்,ஜெர்மனியில் 30 லட்சம் பேர்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்