மம்தாவின் தேர்தல் தோல்வியை குழந்தைகள் கூட கணித்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி பதிலடி

By செய்திப்பிரிவு

"மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடையப் போவதை குழந்தைகள் கூட கணித்துவிடும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே, தேர்தல் முடிவடைவதற்குள்ளாகவே ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருவதை, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து நேற்று முன்தினம்பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் தேர்தல் இன்னும் முடிவடையவில்லை. அதற்குள்ளாகவே எந்தக் கட்சி வெற்றி பெறும், எது தோல்வி அடையும் என்பதைக் கணித்துக் கூற பிரதமர் நரேந்திர மோடி என்ன கடவுளா?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கூச்பெஹார் மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிபங்கேற்றார். அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் எங்கு பார்த்தாலும் பாஜக அலை வீசி வருகிறது. அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சி அரசியலை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மக்களின் இந்த மனநிலையை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் உணர்ந்து விட்டனர். எனவேதான், தோல்வி பயம் காரணமாக அவர்கள் ஆங்காங்கே சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக, நந்திகிராம் தொகுதியில் தாம் தோல்வி அடைந்தது மம்தா பானர்ஜிக்கு தெரிந்துவிட்டது. இதன் காரணமாகவே, கடந்த 1-ம் தேதி அங்குள்ள வாக்குச்சாவடியில் பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது போன்றஒரு நாடகத்தை மம்தா அரங்கேற்றினார். அன்றைக்கே அவர் தோல்வி அடைந்தது உறுதியாகிவிட்டது.

மம்தா பானர்ஜியின் நிதானமற்ற செயல்கள், கோபமான பேச்சுகள் அனைத்தும் அவரது தோல்விபயத்தையே வெளிப்படுத்துகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, மேற்கு வங்கத்தில் மம்தாவும், திரிணமூல் காங்கிரஸும் தோல்வி அடையும் என்பதை சிறு குழந்தைகள் கூட கணித்துவிடும். இதற்கெல்லாம் கடவுள் வர வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்