வெளிநாடு செல்லும் அதிகாரிகள் அனுமதியின்றி 1 மாதத்துக்கு மேல் தங்கினால் பதவி நீக்கம்: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

By பிடிஐ

அரசுப் பணிக்காக வெளிநாடு செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஓஎஸ் (வனத்துறை) அதிகாரி கள் அரசின் அனுமதியின்றி 1 மாதத் துக்கு மேல் அங்கு கூடுதலாக தங்கினால் இனி அவர்கள் தங்கள் பதவியை இழப்பார்கள்.

இது தொடர்பான புதிய விதி முறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அரசுப் பணி மற்றும் கல்வி விடுப்பில் வெளிநாடு செல்லும் அதிகாரிகளில் சிலர், அனுமதிக் கப்பட்ட காலம் முடிந்தவுடன் நாடு திரும்புவதில்லை. இவர்கள் விடுப்புக் கடிதம் அனுப்பி விட்டு, அதற்கு அரசின் ஒப்புதலை பெறாமலேயே அங்கு கூடுதலாக தங்குவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மத்தியப் பணியாளர் நலத் துறை நேற்று வெளியிட்டுள்ள புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசின் அனுமதி பெறாமல் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நோட்டீஸ் அனுப்பும். இதன் மூலம் அந்த அதிகாரி தனது நிலையை விளக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த நோட்டீஸுக்கு அந்த அதிகாரி பதில் அளிக்காவிட்டாலோ அல்லது பணியில் சேராவிட்டாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கருதி, அவரை பணியில் இருந்து விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும்.

மாநில அரசுகள் 2 மாதங்களுக் குள் தங்கள் பரிந்துரையை அனுப்பாவிடில், அந்த அதிகாரி ராஜினாமா செய்துவிட்டதாக கருதி மத்திய அரசே அவரை பதவியில் இருந்து விடுவிக்கும். இதன் மூலம் ராஜினாமா நடைமுறை 3 மாதங்களில் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர் நலத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இதுபோல் அனுமதி இல்லாத விடுப்பில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்