ஆபாச பேச்சால் விரக்தி: கேரளாவில் பாதியிலேயே பிரச்சாரத்தை கைவிட்ட திருநங்கை

By செய்திப்பிரிவு

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன.

இந்த தேர்தலில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி (டிஎஸ்ஜேபி) புதிதாக களம் காண்கிறது. பல தொகுதகளில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அக்கட்சி, இரவு பகலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. இந்தக் கட்சியின் சார்பில் மலப்புரத்தில் உள்ள வெங்காரா தொகுதிவேட்பாளராக அனன்யா குமாரிஎன்ற திருநங்கை நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, வெங்காரா தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பாதியிலேயே பரப்புரையை கைவிட்டு வெளியேறினார். மலப்புரத்தில் செய்தியாளர்களை அனன்யா குமாரி நேற்று சந்தித்தார். அவர் கூறியதாவது:

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் திருநங்கைகளுக்கும், பெண்களுக்கும் நல்லது செய்யும் நோக்கிலேயே டிஎஸ்ஜேபி கட்சி எனக்கு வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். இதுகுறித்து கட்சித் தலைவரிடம் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மக்களிடத்தில் நல்ல பெயரைவாங்குவதற்காகவே ஏராளமானபெண்களையும், திருநங்கையையும் வேட்பாளர்களாக டிஎஸ்ஜேபி கட்சி அறிவித்திருக்கிறது. ஆனால், உண்மையில் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் எதிரான கட்சியாகவே இது செயல்படுகிறது. எனவே, இந்தப் பரப்புரையில் இருந்து விலகியிருக்கிறேன். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கட்சியில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்