இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் கரோனா உச்சத்தை தொடும்: நிபுணர்கள் கணிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் நடப்பு ஏப்ரல் மாத மத்தியில் கரோனா வைரஸ் தொற்று உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மத்தியில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. ஒன்றரை மாதங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ் கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 81,466 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும்.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிபுணர் குழு கரோனா 2-வது அலை குறித்து ஆய்வு செய்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கரோனா 2-வது அலை ஏப்ரல் மத்தியில் உச்சத்தை தொடும் என்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்திர அகர்வால், கரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்துதனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, "ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதிக்குள் கரோனா தொற்று உச்சத்தை தொடும். அப்போது நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம். அந்த எண்ணிக்கையை தாண்டவும் வாய்ப்புள்ளது. எனினும் மே இறுதியில் வைரஸ் பரவல் கணிசமாகக் குறையும். அடுத்த 4 நாட்களில் பஞ்சாபில் வைரஸ் பரவல் உச்சத்தை தொடக்கூடும். ஏப்ரல் 10-ம் தேதி அளவில் மகாராஷ்டிராவில் கரோனா தொற்று உச்சத்தை எட்டலாம்" என்று கணித்துள்ளார்.

ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கூறும்போது, "ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் மத்திக்குள் கரோனா வைரஸ் உச்சத்தை தொடும்" என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட் டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 60 சதவீதம் பேர் அந்த மாநிலத்தில் உள்ளனர். அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் 2-வது கரோனா அலையை கட்டுப்படுத்த முடியும் என்று பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்