மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் சுஷாந்த் கோஷ் மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சல்போனி தொகுதி வேட்பாளருமான சுஷாந்த் கோஷ் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. புர்பா மெதினிபூர், பஷ்சிம் மெதினிபூர், ஜார்கிராம், புருலியா, பாங்குரா ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன. இதில் பஷ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் சல்போனி தொகுதியில் மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷாந்த கோஷ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் காந்த மகதோ என்பவரும் பாஜக சார்பில் ராஜீப் குண்டு என்பவரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வாக்குப் பதிவு நாளான நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுஷாந்த கோஷ் தாக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்