மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்தை கடந்தது தினசரி கரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் 2,10,120  ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30,535 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. வரும் 28-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும். வைரஸ் பரவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமராவதி , நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இந்த 7 நாட்களும் அத்தியாவசிய கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது.

மார்ச் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதி வரை 15 நாட்களில் 16 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 150 சதவீதம் உயர்ந்ததது அதன் பிறகு அடுத்த 7 நாட்களில் கரோனா பரவல் என்பது 200 சதவீதத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30,535 ஆக உயர்ந்துள்ளது. 11,314 பேர் குணமடைந்துள்ளனர். 99 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பாதிப்பு 24,79,682 ஆக அதிகரித்துள்ளது,

குணமடைந்தோர் எண்ணிக்கை 22,14,867 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 53,399 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 2,10,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்