கரோனா ஊரடங்கால் சேமிப்பில் கடும் வீழ்ச்சி; நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் சேமிப்பு கடுமையாக சரிந்துள்ள தாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு 2020-21 நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் நாட்டு மக்களின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீடுகளில் சேமிக்கும் அளவு ஜிடிபி-யில் 10.4 சதவீத அளவுக்குசரிந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும்போது மக்களிடையே சேமிக்கும் அளவு அதிகரிக்கும். அதேபோல பொருளா தாரம் மீட்சியடையும்போது மக்களிடையே நம்பிக்கை உருவாகி செலவழிக்கும் பழக்கம் அதிகரிக்கும்.

ஆனால் கரோனா பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். சில நிறுவனங்களில் ஊதியக் குறைப்பும் நிகழ்ந்தது. இதனால் செலவுகளை ஈடுகட்ட பலர் கடன் வாங்கியுள்ளனர். சிலர் சேமிப்புகளைக் குறைத்து செலவுகளை சமாளித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டின் (2020-21) முதல் காலாண்டில் வீடுகளின் சேமிப்பு அளவு ஜிடிபி-யில் 21 சதவீதமாக இருந்தது, இரண்டாம் காலாண்டில் 10.4 சதவீதமாக சரிந்துவிட்டது.

இதேபோன்று 2008-09-ம் நிதி ஆண்டில் சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோது சேமிப்பு அளவு 170 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்தது.

2019-20 நிதி ஆண்டின் முதல் காலாண்டிலிருந்தே குடிமக்களின் கடன் வாங்கும் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. இது 2020-21 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 37.1 சதவீத அளவை எட்டியது.

இப்போது கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் வீடுகளின் சேமிப்பு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என ஆர்பிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்கும் அளவு இரண்டாம் காலாண்டில் 20 புள்ளிகள் அதிகரித்து ரூ.102.7 லட்சம் கோடியாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்