அதிகரிக்கும் கரோனா: நாக்பூரில் லாக்டவுன் 31-ம் தேதி வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

நாக்பூரில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து அங்கு அமலில் உள்ள ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 19ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு

மகாராஷ்டிராவி, நாக்பூர், அமராவதி, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மாவட்டத்திலும் கரோனா தொடர்ந்து பரவி வரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வரும் நிலையில் அங்கு மார்ச் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் நாக்பூரில் இன்னமும் நிலைமை சீரடையவில்லை. இதனையடுத்து முழு ஊரடங்கு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும். மக்கள் முன் வந்து ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மாலை 4 மணி அளவில் அனுமதி வழங்கப்படும் என நாக்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

31 mins ago

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்