பிஹார் தேர்தல்: 9 லட்சம் நோட்டா வாக்குகள்; 4 கட்சிகளை விட அதிகம்

By பிடிஐ

பிஹார் தேர்தலில் 9 லட்சத்து 32 ஆயிரத்து 677 ‘நோட்டா’ வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மொத்த வாக்குப்பதிவில் 2.5 சதவீதமாகும். இது நான்கு கட்சிகளின் வாக்கு சதவீதத்தை விடவும் அதிகம்.

பிஹாரில் 6.68 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 56.80 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பிஹாரின் அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதம்.

இந்த தேர்தலில் 49-ஓ எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற ‘நோட்டா’ பட்டனை 9 லட்சத்து 32 ஆயிரத்து 677 பேர் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 2.3 சதவீத வாக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் ஆளும் முலாயமின் சமாஜ்வாதி 1.1 சதவீத வாக்குகளும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசியின், ஆல் இன்டியா மஜ்லிஸ் இ இதாஹதுல் முஸ்லிமீன் கட்சி 0.4 சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 2 சதவீத வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளன.

ஆனால், நோட்டாவுக்கு 2.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

சினிமா

5 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்