பாஜக நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட 40 பேர்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கம் மற்றும் அசாம்சட்டப்பேரவை தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் முதற்கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இரு மாநிலங்களுக்குமான நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட இந்தப்பட்டியலை பாஜக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அருண் சிங், தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தார்.

இரு மாநிலங்களிலும் பாஜகவின் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மேற்கு வங்க நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரதமர் மோடிதவிர, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் முண்டா,தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, பாபுல் சுப்ரியோ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜகவில் அண்மையில் இணைந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நடிகைகள் பாயல் சர்க்கார், ஸ்ரவந்தி சாட்டர்ஜி மற்றும் உள்ளூர் தலைவர்களின் பெயர்கள் உள்ளன.

இதுபோல் அசாம் தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியிலில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா, கட்கரி,ஸ்மிருதி இரானி, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் தவிர, முதல்வர் சர்வானந்த சோனோவால், ஹிமந்த விஸ்வ சர்மா, பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்