மார்ச் 26-ம் தேதி ‘பாரத் பந்த்’: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ம் தேதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்தன. அத்துடன், வரும் 15-ம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கங்களும் டெல்லியில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்