திப்பு ஜெயந்தி விழாவில் நடந்த வன்முறையில் 2 பேர் பலி: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்-இந்துத்துவா அமைப்பினர் அழைப்பு

By இரா.வினோத்

திப்பு ஜெயந்தி விழாவைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் பலியாயினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்துத்துவா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

‘மைசூரு புலி' திப்பு சுல்தானின் பிறந்த நாளை ‘திப்பு ஜெயந்தி' என்ற பெயரில் கர்நாடக அரசு கடந்த 10-ம் தேதி அரசு விழாவாக‌ (நவ.10) கொண்டாடியது. நாட்டில் முதல் முறையாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட‌ப்பட்டதால் பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எரிச்சல் அடைந்து போர்க்கொடி உயர்த்தின.

மேலும் கடந்த 10-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பாக குடகு மாவட்டம் மடிகேரியில் கண்டன‌ பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது இஸ்லா மியர்கள் அதிக‌ளவில் வசிக்கும் பகுதியில் இந்துத்துவா அமைப் பினர் திப்பு சுல்தானை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் உருவானது.

இதையடுத்து பதற்றத்தை தணிக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் குடகு மாவட்ட அமைப்புச் செயலர் குட்டப்பா (60) சுவர் ஏறி குதிக்கும் போது படுகாயமடைந்து உயிரி ழந்தார். இதே போல போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சாகுல் அகமது (27) என்பவர் உயிரிழந்தார். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் ஏற்பட் டுள்ளது.

இதற்கிடையில், சட்டம்-ஒழுங்கை காக்க தவறிய சித்த ராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தியது போல, கர்நாடகாவில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்களை கண்டித்து, சோனியா பேரணி நடத்த முன்வருவாரா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ் கர்நாட் மற்றும் பாஜக எம்.பி சிம்ஹா வுக்கு சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்தும் விசா ரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு திப்பு ஜெயந்தியை கொண்டாடியத‌ற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடகில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி உயிரி ழந்ததை கண்டித்தும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா ஆகிய இந்துத் துவா அமைப்பினர் இன்று கர்நாட காவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று காவல் துறை உயரதி காரிகளின் அவசர ஆலோ சனை கூட்டம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்