விமான நிலையத்தில் சந்திரபாபு உண்ணாவிரதம்

By என். மகேஷ்குமார்

ஆந்திர முதல்வர் ஜெகன் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், திருப்பதி, சித்தூர், மதனபள்ளி ஆகிய பகுதிகளுக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக சந்திரபாபு நாயுடு விமானம் மூலம்ரேணிகுண்டாவுக்கு நேற்று வந்தார். அங்கிருந்த போலீஸார், "கரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக திருப்பதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே நீங்கள் திருப்பதிக்கு செல்ல அனுமதிக்க முடியாது" என கூறினர். இதனால் சந்திரபாபு நாயுடுவுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸாரின் செயலை கண்டித்து விமான நிலைய தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தினார். மதியம் உணவு உண்ணாமலும், குடிநீர் அருந்தாமலும் சுமார் 8 மணி நேரம் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் எஸ்பி அப்பல்நாயுடு, சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஹைதராபாத் விமானத்தில் அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்