பிஹாரில் காங்கிரஸுக்கு மீண்டும் முன்னேற்றம்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், சமீப காலமாக இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை தெரிகிறது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் அங்கமாக காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டிருந்தது. இங்குள்ள 243 தொகுதிகளில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், கட்சிக்கு 16 தொகுதிகளில் முன்னணி வகிக்கும் நிலை தெரிகிறது.

பிஹாரின் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இவருடன் அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. இவர்களில் லாலு கட்சியின் சார்பில் அவரது இளய மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கலந்து கொண்டார். ஆனால், சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டங்களில் லாலு மற்றும் நிதிஷ்குமார் மேடைகளில் கலந்து கொண்டனர்.

பிஹாரில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெறும் நான்கு தொகுதிகள் கிடைத்திருந்தது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்