தீவிரவாதத்துக்கு நிதியளிக்கும் 37 அமைப்பின் சொத்து முடக்கம்

By பிடிஐ

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி யுதவி, கருப்புப் பணம், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை உள் ளிட்ட காரணங்களுக்காக 37 அமைப்புகளின் ரூ.2.12 கோடி மதிப்புள்ள சொத்துகளை இந்திய அரசு முடக்கியுள்ளதாக, கருப்புப் பணத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் அறிவித்துள்ளது.

ஐஎஸ் மற்றும் இதர தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைத்துவருவது தொடர்பாக பல்வேறு நாடுகளின் செயல் பாடுகளை எப்ஏடிஎப் ஆய்வு செய்தது.

இதில், இந்தியா தீவிரவாதத் துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. தீவிரவாதத்துக்கு நிதி அளிக்கும் அமைப்புகள் எனச் சந்தேகிக்கப்படும் 37 அமைப்பு களின் சுமார் ரூ.2.12 கோடி அள விலான சொத்துகளை இந்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

எப்ஏடிஎப் அமைப்பில் இந்தியா முழு நேர உறுப்பினர் ஆகும். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளும் முழு நேர உறுப்பு நாடுகளாக உள்ளன.

கருப்புப் பணம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிர வாத செயல்பாடுகளுக்கு நிதி யுதவி உள்ளிட்ட நிதி நடவடிக்கை களுக்கு எதிராக எப்ஏடிஎப் அமைப்பு கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்