ம.பி. மதச் சுதந்திர சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லவ் ஜிகாத்தை தடுக்க மத்திய பிரதேசத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி மதச் சுதந்திர அவசர சட்டம் அமலுக்கு வந்தது.

கட்டாய மத மாற்றம்,மதத்தை மறைத்து திருமணம் செய்தல், தாழ்த்தப்பட்டோர், சிறாரை மதமாற்றம் செய்தல் ஆகிய குற்றங்களுக்கு தண்டனை விதிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் விஷால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறும்போது, "ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிக்க அறிவுறுத்தினோம். இந்த மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்படாது. உயர் நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகலாம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்