கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான முதோல் இன நாய் விமானப் படையில் சேர்ப்பு

By இரா.வினோத்

கர்நாடகாவின் முதோல் இன வேட்டை நாய், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. இவற் றுக்கு கேரவன் நாய் அல்லது மராத்தா இன வேட்டை நாய் என்ற பெயர்களும் உள்ளன.

கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த நாய்களை மராட்டிய மன்னர் சிவாஜியும், பாகல்கோட்டை மன் னர் கோர்படாவும் தங்களது படையில் போருக்காக பயன் படுத்தியுள்ளனர். 2017-ம் ஆண்டில்முதோல் இன வேட்டை நாய்கள்இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத் திலும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய விமானப் படையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக முதோல் இன வேட்டை நாய்கள், படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக பாகல்கோட்டை யில் நடந்த நிகழ்ச்சியில் 4 முதோல் இன வேட்டை நாய்க் குட்டிகளை இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் ஒப்படைத்தார்.

இதுகுறித்து இந்திய தேசிய கென்னல் கிளப் நிர்வாகி மகேஷ் அகாஷ் கூறும்போது, “முதோல் இன வேட்டை நாய் களுக்கு தொலைத்தூரத்தில் உள்ளவற்றையும் கூர்மையாக உற்றுநோக்கி கண்டறியும் பார் வைத் திறன் உள்ளது. இதனால் ராணுவத்தில் எல்லையை கண் காணிப்பதற்கும், விமானப் படையில் ஓடுதளத்தை கண் காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும். இதன் தாடைகள் நீண்டு,கடினப் பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சிறப்பாக வேட்டையாடும் திறன் கொண்டது.

முன்னங்கால்களும், பின்னங் கால்களும் நீண்டு வயிறு ஒட்டி இருப்பதால் மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை ஆகும். எனவே இந்த வகை நாய்களால் நாட்டின் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க இயலும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்