‘லவ் ஜிகாத்’ புகார் கூறி தாக்குதல்: ம.பி. முன்னாள் எம்எல்ஏ உட்பட 17 பேரை கைது செய்தது போலீஸ்

By செய்திப்பிரிவு

உலகளவில் காதலர் தினம் கடந்த 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவில் காதலர் தினம் கொண்டாட சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 14-ம் தேதி 2 இடங்களில் ரெஸ்டாரன்டுகளில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர நாத் சிங் உட்பட 17 பேரை போபால் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று டிஐஜி இர்ஷத் வாலி நேற்று தெரிவித்தார்.

போபால் ஷியாம் ஹில்ஸ் பகுதியில் உள்ள ‘ஜங்க்யார்டு கேப்’ என்ற ரெஸ்டாரன்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலர் திடீரென உள்ளே புகுந்து அங்கிருந்த மேசை, நாற்காலி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அவர்கள் தங்களை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து ரெஸ்டாரன்டின் மேலாளர் நரேந்திர குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ‘லவ் ஜிகாத்’தை ஊக்குவிப்பதாகவும், ரெஸ்டாரன்டுக்குள் மறுபடியும் பார்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்கள்’ என்று நரேந்திர குமார் புகாரில் கூறியுள்ளார்.

மற்றொரு கும்பல் பிட்டன் மார்க்கெட் பகுதியில் உள்ள ‘கவ்பாய் ரெஸ்ட்ரோ பார்’ உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பலர் முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர நாத் சிங்குடன் தொடர்பு உள்ளவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்