ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஜன. 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By இரா.வினோத்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு தரப் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கள் துஷ்யந்த் தவே மற்றும் ஆச்சார்யா, “இவ்வழக்கு கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட தைப் போல தினசரி விசாரிக்க வேண்டும். எனவே வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் இறுதி வாதத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தனர்.

அன்பழகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜூனா மற்றும் வி.ஜி.பிரகாசம், “வழக்கு விசாரணையை விரைவாக தொடங்க வேண்டும்; தேதியை இன்றே அறிவிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர். இவற்றுக்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

அப்போது குறுக்கிட்ட சுப்பிர மணியன் சுவாமி, “இவ்வழக்கின் முதல் புகார்தாரர் என்ற முறையில் அரசு வழக்கறிஞருக்கு உதவவும், விசாரணையில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் எனக்கு அனுமதி அளித்திருக்கிறது. எனவே மேல் முறையீட்டு விசாரணையிலும் எனக்கு அனுமதி வழங்க வேண் டும்'' என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கள்,'' மனுதாரர்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கு குறித்த ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும்''என உத்தரவிட்டனர்.

மேலும் “இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து தரப்பினரும் தாங்கள் இறுதிவாதம் செய்யப்போகும் அம் சங்கள் குறித்த தொகுப்பை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்.

அல்லது அனைத்து தரப்பினரும் கலந்து ஆலோசித்து வழக்கு விசாரணை குறித்த யோசனையை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் வழக்கினை விரைவாக விசாரிக்க முடியும். வருகிற ஜனவரி 8-ம் தேதிக்கு பிறகு, வழக்கின் விசா ரணை குறித்த விவரங்கள் அறிவிக் கப்படும்'' எனக்கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

கர்நாடக அரசு தரப்பில் மீண்டும் மேல்முறையீட்டுக்கான அவசியம் குறித்த பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை கணிதப் பிழைகள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதா தரப்பின் சொத்துகளையும், கடன்களையும் கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்து, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்''என கோரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்