கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97%: உலகளவில் குணமடைதல் விகிதம் அதிகம்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் அதிகமானவற்றுள் ஒன்றாகும்.

நாட்டில் தற்போது மொத்தம் 1,03,73,606 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,301 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது 1.75 லட்சத்திற்கும் குறைவானோர் (1,73,740) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 1.62 சதவீதம் மட்டுமே ஆகும்.

பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தேசிய அளவில் சரிந்து வருவதையடுத்து, 31 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5000க்கும் குறைவானோர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 78 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று (ஜனவரி 28, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 82,039 பேர் உட்பட, நாடு முழுவதும் 23.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு (23,55,979) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,102 முகாம்களில் 3,26,499 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 42,674 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,006 பேரும், மகாராஷ்டிராவில் 2,556 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 944 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,666 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

நேற்று கேரளாவில் 5,659 பேரும், மகாராஷ்டிராவில் 2,171 பேரும், தமிழகத்தில் 512 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 123 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

10 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்