அச்சிடுவதற்கு பதில் மின்னணு ஆவணங்களாக தயாரிப்பு; மத்திய பட்ஜெட்டை மொபைலில் பார்க்க புதிய செயலி: அறிமுகம் செய்தார் அமைச்சர்

By செய்திப்பிரிவு

வரும் நிதி ஆண்டுக்கான (2021-22) மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கரோனா பரவ லைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் விவரங் களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் பார்ப்பதற்கு வசதியாக புதிய செய லியை (மொபைல் ஆப்) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகம் செய்தார்.

அல்வா தயாரிப்பு

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கு வதன் அடையாளமாக நிதி அமைச்சகம் அமைந் துள்ள வளாகத்தில், அல்வா தயாரிக்கும் பணி கள் தொடங்கும். பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் அதிகாரிகளும் இந்த நாளிலிருந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அவரவர் வீடுகளுக்குச் செல்ல அனுமதி கிடையாது. செல்போன் மூல மும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. கடுமையான பணி கள் இருப்பதை இனிப்பு சாப்பிட்டு தொடங்கும் விதமாக அல்வா தயாரித்து அனைத்து நிதி அமைச்சக பணியாளர்களுக்கும் வழங்கப்படு வது காலம் காலமாக மரபாக உள்ளது.

அதேபோல நேற்று நடைபெற்ற இந்த நிகழ் வின்போது பட்ஜெட்டை எளிதாக பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இந்த செயலியில் 14 மத்திய பட்ஜெட் ஆவணங்கள் இடம்பெறும். ஆண்டு நிதி அறிக்கை, மானியக் கோரிக்கை மீதான ஒதுக்கீடு (டிஜி), நிதி மசோதா உள்ளிட்ட விவரங்களும் இதில் இடம்பெறும்.

எளிதில் பயன்படுத்தும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விவரங்களைப் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் செயல்படும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பட்ஜெட் ஆவ ணங்கள் இந்த செயலியில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த செயலியை மத்திய பொரு ளாதார விவகாரத் துறை (டிஇஏ) வழிகாட்டு தலின்படி உருவாக்கியுள்ளது. இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த ஆண்டுதான் முதல் முறையாக பட் ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படவில்லை. மின் னணு ஆவணங்கள் மட்டுமே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்