நன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: 125-வது பிறந்த நாளில் மோடி அஞ்சலி 

By பிடிஐ

நன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளில் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தார். அவரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினத்தை 'பராக்ரம் திவாஸ்' (துணிச்சல் தினம்) என்று கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பராக்ரம் திவாஸ் முன்னிட்டு இன்று பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்கு விஜயம் செய்துள்ளார். மாலை, கொல்கத்தா விக்டோரியா நினைவிடத்தில் சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கையை வெளிப்படுத்தும் நிரந்தரக் கண்காட்சியைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

நேதாஜியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியத் தாயின் உண்மையான மகனுமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

ஒரு நன்றியுள்ள நாடு நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்".

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

45 mins ago

விளையாட்டு

51 mins ago

வலைஞர் பக்கம்

4 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்