மிரட்டி என்னை பணிய வைக்க முடியாது: பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ஆவேசம்

By செய்திப்பிரிவு

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) இளைஞரணி தலைவர் வாஹீத் பர்ராவை என்ஐஏ அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, வாஹீத் பர்ராவின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, காஷ்மீர் நிர்வாகம் அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது.

தற்போது வீட்டுச் சிறையில் இருந்து மெகபூபா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வாஹீத் குடும்பத்தினரை சந்திக்க விடாமல் மெகபூபா முப்தியை போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மெகபூபா முப்தி நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாஹீத் ஒரு மிகச்சிறந்த ஜனநாயகவாதி. காஷ்மீரில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அவர் ஜனநாயக பாதைக்கு மாற்றி இருக்கிறார். பிடிபி கட்சியினரையும் என்னையும் அச்சுறுத்துவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வங்கிக் கணக்குகளையும், அரசு ஆவணங்களையும் விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. எனது தந்தையின் (முப்தி முகமது சயீது) நினைவிடம் தொடர்பாககூட அவர்கள் விசாரித்து வருகிறார். மிரட்டல்கள் மூலம் என்னை பணிய வைக்க பாஜக நினைக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்