விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க பிஹாரில் இருந்து டெல்லிக்கு 1,000 கிமீ. சைக்கிளில் சென்ற முதியவர்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த மாஞ்சி (61) என்ற முதியவர், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்பினார். ஆனால், டெல்லி செல்வதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை.

இதையடுத்து, தன்னிடம் உள்ள சைக்கிளிலேயே டெல்லிசெல்வது என மாஞ்சி முடிவெடுத்தார். அதன்படி, கடந்த 7-ம் தேதி சிவானில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர் சமீபத்தில் டெல்லி சென்றார். சுமார் 1,000 கி.மீ. தொலைவை கடக்க அவருக்கு 11 நாட்கள் ஆனது.

அங்கு விவசாயிகள் போராட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளா்.

இதுகுறித்து மாஞ்சி கூறுகையில், “நியாயமான கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்
டத்துக்கு எனது ஆதரவை கொடுக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் பலசிரமங்களுக்கு மத்தியில் சைக்கிளில் டெல்லி வந்திருக்கிறேன். புதிய வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்றார்.மாஞ்சி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்