விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் பாரத் பந்த்தில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா அழைப்பு

By பிடிஐ

போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் 10 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் புதன் கிழமை திட்டமிடப்பட்டுள்ள ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை டிசம்பர் 8-க்கு நாடு தழுவிய பாரத் பந்த்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி, சிவசேனா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. சிவசேனாவைத் தவிர, மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் மற்ற இரண்டு கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் - பாரத் பந்திற்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பாரத் பந்தில் பங்கேற்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு நமது உண்மையான ஆதரவைத் தெரிவிப்பதாக இருக்கும். இது ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கைகளை எழுப்புவதற்கான பந்த் அல்ல, மாறாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்பபு தெரிவிக்கும் நம் நாட்டு விவசாயிகளின் குரலை வலுப்படுத்துவதற்கான ஒரு பந்த் ஆகும்.

டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இப்போது 12 நாட்களாக கடுங்குளிரைப் பற்றியோ அரசாங்கத்தின் அடக்குமுறை பற்றி கவலைப்படாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகள் பாரத் பந்த்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. எனவே, விவசாயிகளை ஆதரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்."

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்