வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் வலுக்கிறது போராட்டம்; அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை: திட்டமிட்டபடி 8-ம் தேதி பந்த் நடக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதனிடையே, மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாத நிலையில், திட்ட மிட்டபடி வரும் 8-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடக் கும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் தங்களுக்கு அரசு வழங்கி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத் தப்பட்டுவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத் தப்படாது என மத்திய அரசு பலமுறை மறுத்தும் அதை விவசாயிகள் ஏற்க வில்லை. ஹரியாணா, பஞ்சாப் மாநிலங் களில் போராட்டங்கள் மிக தீவிரமாக நடந்தன. பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் அர சுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கடந்த 27-ம் தேதி டெல்லிக்குள் நுழைந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்துக் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் முகா மிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். முக்கிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடப்பதால், டெல்லியே ஸ்தம்பித்துள்ளது. மற்ற மாநிலங் களில் இருந்து டெல்லிக்கு வருவோ ரும், டெல்லியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வோரும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கடந்த ஒரே வாரத்தில் 3 முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவற்றில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகளுட னான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடந்த இந்த பேச்சு வார்த் தையில் 40 முக்கிய விவசாய சங்கங் களின் பிரதிநிதிகள் கலந்துகொண் டனர். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை இணை யமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

மதியம் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது. விவசாயிகளின் கோரிக்கை களை திறந்த மனதுடன் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறிய அவர், இது தொடர்பான சட்ட அம்சங்களில் திருத் தம் மேற்கொள்ளவும் அரசு தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால், அமைச்சரின் கூற்றை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட் டில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கூறிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், இதைத் தவிர வேறு எந்த தீர்வையும் ஏற்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர்.

மேலும், இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளுக்கு தங்களை இனி அழைக்க வேண்டாம் என்றும் விவசாயிகள் கோபத்துடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இந்த பேச்சுவார்த் தையும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 9-ம் தேதி (புதன்கிழமை) அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரு மாறு விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

திட்டமிட்டபடி ‘பந்த்’

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த விவசாய சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘அரசு நடத்தும் பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வையும் தராது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். அதனால், ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் 8-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

பிரதமர் மோடி ஆலோசனை

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச் சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோ ருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தி னார். அப்போது, விவசாய சங்க பிரதி நிதிகளிடம் என்னென்ன வாக்குறுதிகள் வழங்க போகிறோம் என்பது குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர்கள் எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், விவசாயிகள் அறிவித்துள்ள நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

10 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்