கரோனா பாதிப்பு: சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4.5% ஆக குறைந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை விட, குணடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

35,551 நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 40,726 ஆக உள்ளது. இதன் மூலம், தற்போதைய பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 5,701 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளன.

தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக, தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை விட, குணடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. வெறும் 4.5 சதவீதம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 4,22,943 ஆகும். இது வரை குணமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 89,73,373 ஆகும். குணமடைந்தோருக்கும், சிகிச்சையில் உள்ளோருக்கும் இடையேயான வித்தியாசம் 85,50,430 ஆகும்.

புதிதாக குணமடைந்தோரில் 77.64 சதவிகிதம் பேர் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,924 பேர் குணமடைந்த நிலையில், கேரளா முதலிடத்தில் உள்ளது. 5,329 பேர் குணமடைந்த நிலையில் தில்லி இரண்டாமிடத்திலும், 3,796 நோயாளிகள் குணமடைந்த நிலையில் மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளது.

புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 75.5 சதவிதம் பேர் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,316 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கேரளா முதலிடத்தில் உள்ளது. 3,944 புதிய தொற்றுகளோடு தில்லி இரண்டாமிடத்திலும், 3,350 புதிய நோயாளிகளோடு மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்