நாடுமுழுவதும் கரோனா தொற்று: கணிசமாக குறைந்தது

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் கரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 31,118 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் நாடுமுழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,62,810 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 41,985 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் நாடுமுழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88,89,585 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மொத்தம் 4,35,603 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 4.74 சதவீதம்.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைந்தோர் வீதம் 93.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,89,585 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,621 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் இறப்பு வீதம் மேலும் குறைந்து 1.45 சதவீதமாகியுள்ளது. ஒரு மில்லியன் பேருக்கு இறப்பு குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


கடந்த ஒரு மாதத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி, ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்