இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 90 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்து 4 ஆயிரத்து 366 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 84 லட்சத்து 28 ஆயிரத்து 409 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று (வியாழன்) மட்டும் கரோனாவால் 584 பேர் இறந்த நிலையில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ச்சியாக 13-வது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் உள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகமாகவுள்ளது. அங்கு 80,728 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக கேரளாவில் 68,352 பேருக்கும், டெல்லியில் 43,221 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் சதவீதம் 5%-க்கும் கீழ் குறைந்திருக்கிறது. அதேபோல், தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து மீள்வோரின் சதவீதம் 93.58% ஆக இருக்கிறது.

இவ்வாறு சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்