கரோனா ஊரடங்கு காலத்தில் 1.7 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் சரிவு

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் 116 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 117 கோடியாக உயர்ந்தது. கடந்த மார்ச் மாத நிலவரத்தின்படி நாடு முழுவதும் 115 கோடியே 70 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அமல் செய்யப்பட்டன. ஜூன் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 114 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் கிராமங்களில் 52.1 கோடி செல்போன் இணைப்புகளும் நகரங்களில் 61.9 கோடி செல்போன் இணைப்புகளும் உள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 1.7 கோடி வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர்.

இதுகுறித்து கவுன்ட்டர் பாயின்ட் ரிசர்ச் அமைப்பின் துணைத் தலைவர் நீல் ஷா கூறும்போது, "கரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். ஊரடங்கு காலத்தில் அவர்கள் செல்போன் கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

36 mins ago

இந்தியா

17 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்