டெல்லியில் வெங்கடேஸ்வரா வைபவ உற்சவம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

By என்.மகேஷ் குமார்

டெல்லியில் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை  வெங்கடேஸ்வரா வைபவ உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்ற உள்ளது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி நேற்று கூறியதாவது:

உலகம் முழுவதும் ஏழுமலையானின் புகழை பரப்ப வேண்டும் என்கிற குறிக்கோளோடு, இதுவரை விசாகப்பட்டினம், குண்டூர், நெல்லூர் ஆகிய இடங்களில்  வெங்கடேஸ்வரா வைபவ உற்சவம் நடைபெற்றது. 10 நாட்கள் வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையானுக்கு திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் அங்குள்ள பக்தர்களின் முன்னிலையில் நடத்தப்படும்.

இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நவம்பர் 7-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்