சசிகாந்த் இன்று காங்கிரஸில் இணைகிறார்; 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு உத்வேகம் அளிக்கும்: தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை

By இரா.வினோத்

சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில் (41) கடந்த 2009-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். நேர்மையாகவும் துணிச்சலாகவும் ‌பணியாற்றியதால் ம‌க்களின் நன்மதிப்பை பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019-ல்சசிகாந்த் செந்தில் தனது மாவட்டஆட்சியர் பதவியை ராஜினாமாசெய்தார். இந்நிலையில், ்அவர்காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார். இதையடுத்து அவர் இன்றுசென்னை, சத்தியமூர்த்தி பவனில்தமிழக காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் காங்கிரஸில்இணைகிறார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், “சசிகாந்த் செந்தில் சிறந்த மாவட்ட ஆட்சியராக 10 ஆண்டுகள் கர்நாடகாவில் பணியாற்றியவர். நேர்மையான‌ பணிக்காக மக்க ளால் அங்கீகரிக்கப்பட்டவர். தைரியமும், நேர்மையும் மிகுந்தஅவரை காங்கிரஸுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாஜக ஆட்சியில் வகுப்புவாதபிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதில் சசிகாந்த்செந்தில் தீவிரமாக இருக்கிறார்.எதிர்கால நாட்டின் நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும்எத்தகைய வியூகங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதை அவர்ஏற்கெனவே ராகுல் காந்தியுடன் ஆலோசித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகாந்த் செந்திலின் வருகை தமிழக‌ காங்கிரஸுக்கு உத்வேகம் அளிக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

25 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்