அறக்கட்டளை நிதியில் மோசடி புகார்: கேரள தேவாலயத்தில் வருமான வரி சோதனை

By செய்திப்பிரிவு

அறக்கட்டளை நிதியில் மோசடி செய்வதாக வந்த புகாரையடுத்து கேரளாவில் உள்ள தேவாலய வளாகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கேரளாவை தலைமையிட மாகக் கொண்ட ஈஸ்டர்ன் சர்ச் என்ற தேவாலய வளாகங்கள் கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தலைவராக கே.பி. யோஹனன் உள்ளார். தேவாலயத்தின் தலைமையகம் திருவல்லாவில் அமைந்துள்ளது. இந்நிலையில், தேவாலய வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை, ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு வழிகளில் திருப்பி விடுவதாகவும், அந்த நிதியில் மோசடி நடப்பதாகவும் வருமான வரித் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, தேவாலய வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று வரை 3 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த வியாழக்கிழமை முதல் கேரளா மற்றும் தேவாலயம் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிது.தற்போது வரை ரூ.8 கோடிஅளவுக்கு ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வேறு வழிகளில் அவர்கள் திருப்பி விட்டுள்ளனர். மேலும் தேவாலயத்தின் எப்சிஆர்ஏ கணக்கு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், வேறு அறக்கட்டளைகள் மூலம் தேவாலயத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேவாலயத்தின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி குவிந்துள்ளது.

ஆனால் அந்த நிதியை மத காரியங்களுக்கு பயன்படுத்தாமல், கல்வி நிலையங்கள் அமைத்தல், ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

4 mins ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்