சாதி, மத நம்பிக்கை அடிப்படையில் யாரையும் பேதப்படுத்தக் கூடாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

By பிடிஐ

சாதி, மத நம்பிக்கை அடிப்படையில் எவரையும் பேதப்படுத்திடக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசிய தாவது: சமூகங்களுக்கு இடையே விரோதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் பண்ணுவது ஏற்கத்தக்கது அல்ல. யாரையும் சாதி, மத நம்பிக்கை அடிப்படையில் பேதம் பார்க்கக்கூடாது.

சகிப்புத்தன்மை குறைந்து வருவதை நிரூபிக்கும் செய்திகள் வெளிவருகின்றன. இது வேதனையும் வருத்தமும் தருகிறது . அனைவருமே சொந்தங்கள் என்ற கொள்கையை உலகுக்கு முன் வைப்பது இந்தியா என்பதை நாட்டு மக்களுக்கு நான் நினைவு படுத்துகிறேன்.

ஹரியாணா மாநிலம் பரிதாபாதில் தலித் குடும்பத்துக்கு எதிரான வன்முறை, பஞ்சாபில் சீக்கிய புனித நூலுக்கு இழைக்கப் பட்ட அவமரியாதை போன்ற சம்பவங்கள் கவலை தருகிறது. இவை கண்டிக்கப்பட வேண்டி யவை. மதத்தின் பெயரால் அரசியல் பண்ணுவது தேவையற்றது.

இந்தச் சம்பவங்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதல் வர்களிடம் தொடர்புகொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலையவிடாமல் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்