இந்தியா-பாகிஸ்தான் 1971 போர் வெற்றி: லோகோ உருவாக்கும் போட்டி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் பங்களாதேஷ் உருவானது. இந்த போர் வெற்றியின் 50வது ஆண்டு வரும் டிசம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு இந்தாண்டு டிசம்பர் முதல், அடுத்தாண்டு டிசம்பர் 16-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோகோ (அடையாள சின்னம்) ஒன்றை உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரும்புகிறது. இதற்கான லோகோவை, இந்தியர்களிடமிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வரவேற்கிறது. இந்தப் போட்டியில் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி லோகோ உருவாக்க வேண்டும்: -

* முப்படையின் பங்களிப்பை வெளிக்காட்டும் விதத்தில் லோகோ உருவாக்கப்பட வேண்டும்.

* நமது படைகளின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் லோகோ இருக்க வேண்டும்.

* ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டால், அவை 1971ம் ஆண்டு போரில் இந்திய ராணுவம் பயன்படுத்தியதாக இருக்க வேண்டும்.

* அதில் இடம் பெறும் வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும்.

லோகோவை சமர்ப்பிக்க நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். தேர்வில் வெற்றி பெறும் லோகோவுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

20 mins ago

வாழ்வியல்

39 mins ago

சுற்றுலா

42 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்