உயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், குறிப்பாகத் தொற்று பரவும் காலகட்டத்தில், உயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகாலத் தீர்வை வகுப்பது காலத்தின் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 பரவல் காலகட்டத்தில் திரவக் கழிவு மேலாண்மையின் எதிர்காலம் குறித்த இணைய கருத்தரங்கில் அமைச்சரின் இந்த செய்தி வாசிக்கப்பட்டது.

"இன்றைய சூழ்நிலையில் உயிர் மருத்துவக் கழிவுகளின் மேலாண்மை மிக அவசியமாகிறது, உயிர் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நெறிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும்" என்றும் அந்த செய்தியில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஜலசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் அறிவியல் மற்றும் மத்திய அரசின் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் இந்தியத் தண்ணீர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் ஆகியவை இணைந்து இந்த இணைய கருத்தரங்கை நடத்தின. திரவக் கழிவு மேலாண்மையின் எதிர்காலம் மற்றும் உயிர் மருத்துவக் கழிவுகளின் முறையான மேலாண்மை குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 மற்றும் சமூக சுற்றுச்சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு கழிவு மேலாண்மை குறித்த முழுமையான புரிதலை அனைவருக்கும் வழங்குவதே இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

இந்தியா

12 mins ago

சுற்றுலா

36 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்