டிரைப்ஸ் இந்தியா: சென்னை, கோவையில் பழங்குடி மக்களின் பொருட்களை விற்பனை செய்ய வாகனங்கள் அறிமுகம்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் 'நடமாடும் பழங்குடிகள் வாகனங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

பசுமை இயற்கை பொருட்களான இவற்றை காடுகளில் இருந்து டிரைப்ஸ் இந்தியா கொண்டு வருகிறது. ஃபாரெஸ்ட் ஃப்ரெஷ் நேச்சுரல்ஸ் அண்ட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை பழங்குடிப் பொருட்களை, டிரை ஃபெட் நிர்வாக இயக்குநர் பிரவிர் கிருஷ்ணா அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொரு வாரமும் 100 புதிய பொருட்களை டிரைப்ஸ் இந்தியாவில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 100 பொருட்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை 125 டிரைப்ஸ் இந்தியா மையங்களிலும், டிரைப்ஸ் இந்தியா நடமாடும் கடைகளிலும், டிரைப்ஸ் இந்தியாவின் மின் வணிக தளமான tribesindia.com-லும், இதர மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் 'நடமாடும் இந்திய பழங்குடிகள்' வாகனங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக, அகமதாபாத், அலஹாபாத், பெங்களூரு, போபால், சென்னை, கோயமுத்தூர், டெல்லி, கவுகாத்தி, ஹைதரபாத், ஜகதல்புர், குந்தி, மும்பை மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் 57 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்