ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து: முதல்வர் சித்தராமையா அறிவிப்புக்கு மருத்துவர்கள் பாராட்டு

By இரா.வினோத்

பெங்களூருவில் வாகனங்களில் செல்வோர் ஆம்புலன் ஸுக்கு வழிவிடாமல் சென்றால் ஓட்டுநர் உரிமம் சம்பவ இடத் திலே ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதற்கு மருத்து வர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு, அதன் சேவை தொடக்க விழா நேற்றுமுன் தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடிய‌சைத்து தொடங்கிவைத்தார்.

அப்போது சித்தராமையா பேசியதாவது: 'பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, விபத்தில் சிக்கிய நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இத்தகைய தருணங்களில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சில வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக புகார்கள் பதிவாகியுள்ள‌ன.

வேறு சில வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸை முந்தி செல்கிறார்கள். இதனால் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைய முடியாததால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். எனவே ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்றாலோ, ஆம்புலன்ஸை முந்தி சென்றாலோ ஓட்டுநர் உரிமம் சம்பவ இடத்திலேயே ரத்து செய்யப்படும். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆம்புலன்ஸுக்கு பொதுமக்கள் மனிதநேயத்துடன் வழிவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மருத்துவர்கள் வரவேற்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்பை பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வரவேற்று, போலீஸார் உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். கர்நாடக மருத்துவர்கள் சங்கமும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கமும் இந்த அறிவிப்பை வரவேற்று பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ள‌ சிலர், 'சித்தராமையாவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதே வேளையில் சில ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் நோயாளி இல்லாத நிலையிலும் அதிகமாக ஒலி எழுப்பி, மிக வேகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அத்தகைய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

42 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்