கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிவிசி பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு உட்படபல்வேறு நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. மழையில் நனையாமல் பாதுகாப்பவும், கிழியாமலும், சேதப்படாமலும் பத்திரமாக வைக்கவும் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம்.

இப்போது உள்ள ஆதார் அட்டையை பராமரிப்பது கடினம். தண்ணீரில் நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர் அதற்காக ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.

இந்நிலையில், ஆதார் அட்டை பிவிசி பிளாஸ்டிக்கில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சமீபத்தில் அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன. ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு ஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம். ஆதார் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் ‘மை ஆதார்’ என்ற பகுதிக்குச் சென்று ‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதை கிளிக் செய்து ஆதார் அட்டையின் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

ரூ.50 கட்டணம்

பாதுகாப்பு குறியீட்டை நிரப்பிய பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) வரும். அதை பதிவிட்டு, பிவிசி ஆதார் அட்டைக்கான கட்டணமாக ரூ.50ஐ செலுத்தி ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர், 5 வேலை நாட்களுக்குள் புதிய பிவிசி ஆதார் அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் பதிவு செய்தவர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இத்தகவலை ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

ஓடிடி களம்

42 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

58 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்