பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: பல்வேறு கூட்டணிகளால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் 6 தலைவர்கள்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 28 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் பல்வேறு கூட்டணிகளால் ஆறு தலைவர்கள் முதல் அமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிஹாரின் 243 தொகுதிகளில் முக்கியப் போட்டி, ஆளும் தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) மற்றும் மெகா கூட்டணிக்கு இடையே உள்ளது. என்டிஏவில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் விகாஷீல் இன்ஸான் கட்சி ஆகியோர் உள்ளனர்.

மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இணைந்துள்ளன. இதில் என் டிஏவில் மீண்டும் முதல்வர் நிதிஷ்குமாரும், மெகா கூட்டணியில் லாலுவின் மகனான தேஜஸ்வீயும் முதல்வர் வேட்பாளர்களாக உள்ளனர்.

இதில், என்டிஏவில் வெளியேறிய மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதன் புதிய தலைவரான ராம்விலாஸின் மகன் சிராக் பாஸ்வான் அதன் முதல்வர் வேட்பாளர் எனக் கருதப்படுகிறார்.

இவரை போல் தனித்து போட்டியிட புதிதாகப் பியுரல் கட்சி துவக்கியுள்ள புஷ்பம் பிரியா சவுத்ரி என்பவர் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் முதன்முறையாக உருவான மூன்று கூட்டணிகளிலும் முதல் அமைச்சர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சியும், உத்திரப்பிரதேசத்தின் ராவண் என்கிற சந்திரசேகர் ஆஸாத்தின் கட்சி இணைந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது. இதன் சார்பில் பப்பு யாதவ் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

உ.பி.யின் தலீத் தலைவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முன்னாள் மத்திய அமைசரான உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லீமின் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளனர்.

இவர்களது மெகா ஜனநாயக மதசார்பற்ற கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா உள்ளார். இதுபோல், ஆறு தலைவர்கள் இதுவரை முதல்வர் வேட்பாளர்களாக பிஹார் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டதில்லை எனக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

7 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

37 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்