நிபுணர்கள் பங்கேற்கும் கிராண்ட் சேலஞ்சஸ் கூட்டம்: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

By செய்திப்பிரிவு

கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

அக்டோபர் 19 அன்று மாலை 7.30 மணி அளவில், கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் 2020-இல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

சுகாதாரம் மற்றும் வளர்ச்சியில் இருக்கும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச கூட்டுறவை கடந்த 15 வருடங்களில் கிரான்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் வளர்த்துள்ளது.

கொள்கைகளை வகுப்பவர்கள் மற்றும் அறிவியல் துறையின் தலைவர்களை ஒன்று திரட்டி அக்டோபர் 19 முதல் 21 வரை கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டம் மெய்நிகர் முறையில் நடக்கவிருக்கிறது.

'உலகத்துக்காக இந்தியா' என்னும் சிந்தனையுடன் சர்வதேச சுகாதார பிரச்சனைகள் குறிப்பாக கோவிட்-19 மீது சிறப்பு கவனம் செலுத்தி ஆழமான அறிவியல் கூட்டணிகளை இந்த கூட்டம் வலியுறுத்தும். உலகத் தலைவர்கள், புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கோவிட்-கோவிட்-டுக்கு பிந்தைய உலகத்தில் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கும்,

கோவிட்-19 சவால்களை எதிர்கொள்வதற்கும் தேவைப்படும் முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பார்கள்.

நாற்பது நாடுகளில் இருந்து சுமார் 1600 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன், உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மற்றும் நிதி ஆயோக் ஆகியவை, கிராண்ட் சேலஞ்சஸ் கனடா, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை மற்றும் வெல்கம் ஆகியவற்றோடு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றுகிறார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் உபதலைவர் பில்கேட்ஸ் உரையாற்றுகிறார்.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் வில்லன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து கிராண்ட் சேலஞ்சர்ஸ் இந்தியாவை 2012-இல் தொடங்கின. வெல்கமும் இதில் இணைந்துகொண்டது.

சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, தாய் சேய் நலம், தொற்று நோய்கள் உள்ளிட்ட துறைகளில் கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா பணியாற்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்