புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும்;  விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்: ராகுல் காந்தி விமர்சனம்

By பிடிஐ


மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்்த்து வருகின்றன. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம், ஆர்பாட்டம் ஆகியவற்றை நடத்தினர்.

பஞ்சாப் மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்த ராகுல் காந்தி, வேளாண் சட்டத்துக்கு எதிராகடிராக்டர் பேரணியில் பங்ேகற்று மாநிலம் முழுவதும் சென்று வந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்மார்ட் கிராமம் திட்டத்தின் 2-ம் கட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக பஞ்சாப் அரசு ரூ.2,663 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 50 ஆயிரம் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளது.

காணொலி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முதல்வர் அமரிந்தர் சிங், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்திர் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களும், நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்களின் வியர்வை, ரத்தம் ஆகியவற்றின் மீதான தாக்குதல். இந்த தேசத்தின் விவசாயிகளும்,விவசாயத் தொழிலாளர்களும் இதைப் புரிந்து கொண்டார்கள்.

பஞ்சாப் , ஹரியாணாவுக்கு கடந்த வாரம் வந்திருந்திருந்தேன். அப்போது ஒவ்வொரு விவசாயியும், விவசாயத் தொழிளர்களிடம் பேசியபோது, அவர்கள் மீதான தாக்குதலாகவே இந்தச் சட்டத்தைப் பார்க்கிறார்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்து முடிவு எடுக்க வரும் 19-ம் தேதி பஞ்சாப் அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்ட முடிவு எடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அப்போது சட்டப்பேரைவயில் எம்எல்ஏக்கள் இந்த சட்டத்தின் மீது முடிவு எடுப்பார்கள்.

மத்திய அ ரசு கொண்டுவந்திருக்கும் இந்த வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தை வலுவிழக்கச் செய்துவிடும், இந்தியாவை பலவீனப்படுத்தும். காங்கிரஸ் கட்சி நாட்டின் அஸ்திவாரத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் போராடினோம். இதுதான் எங்களுக்கும், பாஜக அரசுக்கும் இருக்கும் வேறுபாடு.

மத்திய அரசு எதையும் மேம்போக்காகப் பேசுகிறது. ஒரு திட்டம் கொண்டுவரும்போது, மக்களிடம் பேசாமல் கொண்டுவருவது இந்தியாவின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும்.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் சாதகமாக இருந்தால், எதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது.

விவாதத்துக்கு எதற்காக மத்திய அரசு அஞ்சியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா என்பதை நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தைப் பார்த்து ஒட்டுமொத்த தேசமும் முடிவு செய்திருக்கும்.

ஆனால், மக்களவை, மாநிலங்களவைியல் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டது. பஞ்சாப் சட்டப்பேரவையில் விவசாயிகள், தொழிலாளர்களின் குரல் ஒலிக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவி்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்