கரோனாவில் இருந்து குணமடைந்த பிஹார் அமைச்சர் வினோத் குமார் மரணம்

By செய்திப்பிரிவு

பிஹாரின் ப்ரான்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏவான வினோத் குமார் (55), அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இதனிடையே, கடந்த ஜூன் 28-ம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வினோத் குமாருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலமாக அவர் கொண்டு வரப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சைப் பலனின்றி வினோத் குமார் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

30 mins ago

தொழில்நுட்பம்

34 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்